ஒரு ஜப்பானிய கதை
By Admin - 23 Oct 2026 8 0

சென்னையில் நல்ல மழை என்ற செய்தியை ரேடியோவில் கேட்டு வெளியே மொட்டை மாடியில் வந்து நின்றேன்! காலை 9 மணி இரவு 6 மணி போல இருண்டிருந்தது! கொட்டும் மழையில் நான் ஒரு தாத்தா குடையுடன் மொட்டை மாடியில் நின்று மழை தண்ணீர் அந்த தெருவை முழ்கடித்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது ஒரு படகில் மஞ்சள் நிற ரெயின் கோட் போட்டுக்கொண்டு ஒரு ஜப்பான் பெண்மணி என்னை பார்த்து
ここで何をしているんだ?
இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?
ここは沈むぞ!
இந்த இடம் மூழ்கிக்கொண்டிருக்கிறது!
みんなもう避難した
எல்லோரையும் வெளியேத்தியாச்சு நீ மட்டும் இங்க எப்படி?
早く降りてこい!
சீக்கிரம் கிழே இறங்கி வா!!
என்று அவள் கிழே இருந்து கத்த ஒன்றும் புரியாமல் நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்! நொடி பொழுதில் எங்கிருந்தோ பொங்கி வந்த அசுர தண்ணீர் பெருக்கு என்னை மொட்டை மாடியிலிருந்து கிழே தள்ளியது! எட்டாவது மாடியிலிருந்து தண்ணீரில் தொப்பென்று விழுந்தேன் அந்த மஞ்சள் நிற கோட் தேவதை என்னை தண்ணீரில் குதித்து நீந்தி என் தலைமுடியை பிடித்து என்னை முழ்கி போகாமல் பார்த்துக்கொண்டாள்! இருந்தும் வெள்ளம் தலைக்கேறியது! அவள் வந்த படகு கவிழ்ந்தது! தண்ணீரின் உள் இருந்து அகாயத்தை பார்ப்பது எவ்வளவு அழகு என்பதை முதல் முறை மரணத்தின் முன் கண்டேன்! கண்கள் இருள தொடங்கியது. அவள் ஒரு டால்பின் மீன் போல என்னை இழுத்துக்கொண்டு தண்ணீரின் ஆழத்திற்கு என்னை அழைத்து சென்றுகொண்டிருந்தாள்! இந்நேரம் நான் மூச்சு முட்டி இறந்திருக்க வேண்டும்! நான் ஏன் இறக்க வில்லை? தண்ணீரின் அடியில் எனக்கு நன்றாக கண்கள் தெரிந்துகொண்டிருந்தது! என்னால் தண்ணீரின் உள் மூச்சு விடமுடிந்தது! ஒன்றும் புரியாமல் அந்த தேவதையை பார்த்தேன் அவள் என்னை பார்த்து சிரித்து என் அருகே வந்து
まもなく着陸いたします。シバラジ様、ご迷惑をおかけして申し訳ありません。
நொடி பொழுதில் நாம் தரைக்கு வந்து விடுவோம், சிரமத்திற்கு மன்னிக்கவும் சிவராஜ் அவர்களே!
என்று சொல்லி என் தலை முடியை பின்னுக்கு இழுத்தாள். நொடிப்பொழுதில் நான் தண்ணீரிலிருந்து வெளியேறி தரைக்கு வந்து சேர்ந்தேன். அப்பொழுது என்னை சுற்றி அனைவரும் வெள்ளை நிற கோட் அணிந்து தங்க ஆபரணங்கள் அணிந்து நின்று கொண்டிருந்தனர்! வெளிச்சம் கண்ணை கூசியது! காதுகள் அடைத்திருந்தது! உடல் குளிர்ந்திருந்தது! அந்த குளிர்ந்த காற்றில் கை கால்கள் நடுங்கின!! நான் நிக்க முடியாமல் குலைந்து கிழே விழுந்தேன்! அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒருவன்,
彼が目を覚ます前に、早く彼を(安全な場所に)送り届けてください。さもないと、三界(全世界)の大問題になってしまいます。
இவன் முழிப்பதற்குள்ள சீக்கிரம் கரை சேர்த்திடுங்க இல்லாட்டி இது திரிலோக பிரச்சனை ஆகிடும்.
அவன் சொல்லிமுடிப்பதற்குள் என் கண்கள் இருண்டது!
முழிச்சு பார்த்தப்ப நான் நிரூபமா ரூம்ல படுத்துட்டிருந்தேன்!
என் மனைவி என்னை பார்த்து: நிரூபமா யாரு?
நான்: எனக்கு எப்படி மா தெரியும்? நான் தான் தண்ணீர் குள்ள திரிலோகத்துள்ள இருந்தேன்னு சொன்னேனே!!
என் மனைவி: எங்க அம்மா அப்பவே சொல்லிச்சு இந்த பைத்தியத்த நம்ப வேணாம்ன்னு!
நான்: அப்போ நீ நான் சொல்றத நம்பல!!
என் மனைவி: யோவ் நீ நிரூபமாக்கு ஃபோன போடு நான் பேசுறேன்!!
நான்: அவ திரிலோகத்துக்கு போய்ட்டா!!
என் மனைவி: அடி செருப்பால..
செருப்புகள் பறந்தது
சென்னையில்
மேகங்கள் தெளிந்தது
சூரியன் பொன்மழையை
பொழிந்தான்!
சிவராஜ் பரமேஸ்வரன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
17 Oct 2020
The Indian Godman - OSHO
A man who was born as Rajneesh turned into a Bhagwan and later became Osho - The Indian godmanDuring his lifetime, he was viewed as a controvers...
28 Jun 2023
மீரா Talks
உலகின் அந்த மூலையிலிருக்கும் பனிப்பிரதேசத்திலிருந்து மீராவிற்கு ஒரு ஈமெயில்(மின்னஞ்சல்), அன்புள்ள மீரா,என் வாழ்நாளில் நான் முதன் முதலில் தமிழில் ...
13 Oct 2020
My First Short Film - Part 1
Jillunu Our Kalavaram - This is my first short as a Director. This movie is very close to me because Blaumahendra Sir watched it and appreciated ...