17 June 2023

By Admin - 18 Jun 2023 1258 1

என்றும் போல் நேற்றும் மெட்ரோ ரயிலின் கூட்ட நெரிசளில் சிக்கி நெளிந்து கதவின் ஓரமாக உள்ள கம்பியை பிடித்து சாய்ந்து கொண்டிருக்க தொப்பென்ற ஒரு சத்தம் கேட்டது! கூட்ட நேர்சிலில் ஒரு அம்மா மயங்கி கீழே விழுந்து விட்டார்! எல்லோரும் ஓடி வந்து எட்டி பார்க்க நானும் எட்டி பார்த்தேன்! எட்டி பார்த்ததில் நான் கஷ்டப்பட்டு பிடித்த இடம் இப்பொழுது காதல் ஜோடிகளின் தஞ்சை இடமாக மாறியது! யார் செத்தாலும் நமக்கென்ன என்ற நிலையில் இருந்தது அவர்களின் காதலை என்ன வென்று சொல்வது! (Liberated தோழர்'ஸ் | தோழி'ஸ் -  ஒன்றும் சொல்லக்கூடாது! Because its their personal thing! ஆனால் இது public space! அந்த மயிரெல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்க மூடிட்டு போங்க பூமர் அங்கிள் என்று அழகான தமிழில் பதில் கூட வரலாம்! இல்லை கண்டிப்பாக வரும்!) எதற்கு வம்பு நாம் நம் அறிவை வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கும் இன்ஸ்டாகிராமை கொஞ்சம் நோண்டுவோம் என்று மொபைலை எடுக்க! அன்பு மனைவி கூப்பிட்டாள் போனை எடுத்து ஹலோ சொல்வதற்குள் சிக்னல் கட்டாகி நோ சிக்னல் என்று வருகின்றது! இந்த நேரத்தில் அருகில் இருந்த காதல் ஜோடியின் கொஞ்சல் கொஞ்சம் அதிமாகி காதலன் தன் மொபில் ஸ்பீக்கரில் 

"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…"

என்று சத்தமாக பாட்டு போட்டு இன்ஸ்டா ரீலிஸ் எடுத்து கொண்டிருக்க, சடாலென்று என் முதுகில் ஒரு தட்டு! யாரென்று திரும்பிப்பார்க்க ஆனந்தி நின்று கொண்டிருந்தாள். இப்பொழுது பாட்டு எனக்கேற்ற பாடலாக மாறுகின்றது,

"ஏதோ ஒன்று என்னை ஈா்க்க…
மூக்கின் நுனி மா்மம் சோ்க்க…
கள்ளத்தனம் ஏதும் இல்லா…
புன்னகையோ போகன்வில்லா…"

ஆனந்தியை பார்த்து நான் சிரிக்க அவள் என்னை பார்த்து சிரிக்க "coffee" என்று நானும் அவளும் ஒருசேர சொல்ல நாங்கள் சிரித்துக்கொண்டோம்! சொல்ல போனால் எனக்கு அறவே coffee புடிக்காது! அவளுக்கோ coffee ரொம்பவும் புடிக்கும் என்பது எனக்கு தெரியும் அதுனால் தெரிந்தே கேட்டேன்! தேனாம்பேட்டை மெட்ரோ ஸ்டேஷன் வந்தது நான் இறங்க வேண்டியதோ வண்ணாரப்பேட்டை அவள் இறங்கியதோ தேனாம்பேட்டை அவளுடன் நானும் தேனாம்பேட்டையில் இறங்கினேன். கூட்டம் அதிகம் இல்லாத அந்த மெட்ரோ நிலையத்தில் எங்களுடன் இறங்கிய வட இந்திய வாலிபிகள் ஆனந்தியை கண்டு குஜராத்தியில் "மச்சி பாரேன்! என்ன cute-அ இருக்காளே! black sleeve less dress! கோதுமை நிறம்! சூப்பர் rosy bud lips! silky hair! structure வேற தாறுமாறு! இருக்க வேண்டியதெல்லாம் இருக்க வேண்டிய இடத்துல கச்சிதமா இருக்கு! கூட போறவன் கொடுத்துவச்சவன்! ஹை ஹை!! என்று கமெண்ட் அடித்து சிரிக்க! ஆனந்தி புன்முறுவலுடன் திரும்பி அவளை பார்த்து குஜராத்தியில் "கொடுத்துவச்சவன் பரோடால இருக்கான்! இவன் இன்னைக்கு நைட் மட்டும் தான் babes" என்று சொல்ல அவர்கள் கூச்சத்தில் தலை குனிந்து ஓட்டம் பிடித்தனர்! நடந்தது ஒன்றுமே புரியாமல் பார்த்து நின்ற என்னை இடுப்போடு கைபோட்டு இழுத்துக்கொண்டு ஆனந்தி லிப்ட்டிற்கு இழுத்து சென்றாள். வட வாலிபிகள் வெளியே நிற்க என்னை இழுத்து கன்னத்தில் லிப்ஸ்டிக் மார்க் வரும் அளவிற்கு அழுத்தமாக முத்தம் கொடுத்தாள்! அவர்கள் வெட்கி தலை குனித்தனர். நொடி பொழுதில் நடந்த சம்பவங்கள் என்னை கிறங்கடிக்க செய்தது. நான் என்ன என்று கேட்பதற்குள் அவளாகவே எல்லாவற்றையும் சொன்னாள்! அவளின் இந்த முத்தம் கூட ஒரு விளையாட்டு தான் என்று தெரிந்தபொழுது எனக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத ஏமாற்றம்! ஏமாற்றத்தோடு லிப்ஸ்டிக் மார்க்கை kerchief கொண்டு துடைத்தேன்.

எங்கு செல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க, தேனாம்பேட்டை சிக்னல் முனையில் Coffee house-ற்கு செல்லலாம் என்று சொன்னேன்! சரி என்று அங்கு சென்றோம் அங்கும் அந்த வட வாலிபிகள் இருந்தனர் இம்முறை எனக்கும் அவர்களை பார்த்து சிரிப்பு வந்தது. ஆனந்தி என்னை திரும்பி பார்த்து "உனக்கு coffee புடிக்கத்துல பண்ணீர் சோடா சொல்லவா?"  என்று கேட்க "பரவாயில்லையே  எனக்கு coffee புடிக்காதுன்னு உனக்கு ஞபாகம் இருக்கு!!" "டேய் உனக்கு என்ன புடிக்கும் என்ன புடிக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்! coffee-ன்னு நீ எப்பவும் கேக்குறது எனக்காகத்தான் எனக்கு எப்பவுமே தெரியும்! சுருக்கமா உன் wife-வ விட எனக்கு உன்ன பத்தி எல்லாம் தெரியும்!" என்று நக்கலாக சொல்லி counter பக்கம் போகின்றாள். நான் நல்ல location பார்த்து உட்கார இடம் தேடி கொண்டிருந்தேன்! ரோடை பார்த்து உட்காருவது போல் இருந்த இரண்டு இருக்கையை பிடித்து உட்கார்ந்தேன்! வட வாலிபிகள் ஆனந்தியிடம் சாரி கேட்டு கொண்டிருந்தனர்! ஆனந்தி அவர்களை சிரித்துக்கொண்டே கலாய்த்துக்கொண்டிருந்தாள். 

5 மணிக்கு ஆரம்பித்த எங்கள் கடலை இரவு 8.30 மணி வரை சென்றது! எங்களின் பழைய கதைகள்! எங்களின் பழைய உறவுகள்! எங்களின் புதிய கதைகள்! புதிய உறவுகள்! அவளின் மூன்று குழந்தையின் சேட்டைகள்! ஆம் அவளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது என்று அந்த வட வாலிபிகள் அறிந்தால் ஷாக் ஆகிவிடுவார்கள் போலும்!! அவள் கணவனை பற்றி விசாரித்தேன்! அவனுக்கு ஏதோ என்னை மட்டும் பிடிக்காதாம்! அதற்கு என்ன காரணம் என்று கேட்க பதில் ஏதும் சொல்லாமல் பேச்சை மாற்றி என்னை பற்றியும் என் மனைவி பற்றியும் விசாரித்தாள். எங்களை பற்றி கூறிக்கொண்டிருக்க என் சினிமா கனவு பற்றி விசாரித்தாள்! சினிமா வெறும் கனவாக மட்டுமே உள்ளது என்று சொல்ல எங்கள் இருவருக்கும் ஒரு சேர மொபைல் அடித்தது! எனக்கு என் மனைவி அவளுக்கு அவள் கணவன்! நான் பொய் சொல்லாமல் உண்மையை மனைவியிடம் சொன்னேன் ஆனால் அப்படி அல்லவே ஒரு பெண்ணின் நிலை அவள் பொய் சொன்னாள்! எனக்கும் அது புரிந்தது. அவள் அசடு வழிந்தவாறே "Hope you understand" நானும் சிரித்துக்கொண்டே "கிளம்பலாம்" என்று சொன்னேன்! 

திரும்பவும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தோம். பைக் பார்க்கிங் சென்று பைக்கை எடுத்து வெளியே வந்தோம் "உன்ன எங்க drop பண்ணனும்?" என்று கேட்டாள் நான் சீரியஸாக யோசித்து "washermenpet-ல drop பண்ணமுடியுமா?" என்று கேட்க "அடிங்க நான் அரும்பாக்கம் போனும் டா!!" "சரி போற வழியில கடைசி மெட்ரோ ஸ்டேஷன்ல drop பண்ணிடு!" என்று சொல்ல அவள் முகத்தில் 1000 வாட்ஸ் பல்பு எரிந்தது போல் ஒரு பிரகாசம், சிரித்துக்கொண்டே "வா வா போலாம் போலாம்" என்று சொல்ல நான் புன்முறுவலுடன் பைக்கில் ஏறி உட்கார்ந்தேன்.  

நானும் அவளும் சிரித்துக்கொண்டே பைக்கில் பேசிக்கொண்டே சென்றோம்! போற வழி எல்லாம் traffic block! முதல் முறையாக traffic block-ஐ ரசித்தோம், ப்ளாக்கிற்காக சந்தோஷப்பட்டோம்! பேசி பேசி பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ஸ்டேஷன் வந்தது! அவள் வேண்டுமென்றே பைக்கை மெதுவாக ஓட்டினாள்! மெதுவாக ஓட்டியும் ஸ்டேஷன் வந்து விட்டது! அவளது தோள்பட்டையை ஊன்றி பிடித்து பைக்கிலிருந்து இறங்கினேன்! ஒரு நிமிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசாமல் நின்றோம். அவளை கட்டியணைத்து bye bye சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்க! அவள் பைக்கை start செய்து bye என்று சொல்லி திரும்பி பார்க்காமல் கிளம்பிவிடுகின்றாள்! நானும் அவள் சென்ற திசையை பார்த்து bye சொல்லி திரும்பி பார்க்காமல் ஸ்டேஷனை நோக்கி நடக்க, அழகு மனைவி மொபைலில் கூப்பிடகின்றாள் "ஹலோ! தோ மா தேனாம்பேட்டை ஸ்டேஷன் reach ஆகிட்டேன் 45 mins-ல வீட்டுக்கு வந்துடுவேன், சோடா மட்டும் தான் குடிச்சேன்! நைட்க்கு இட்லி போதும்மா" என்று பொய் சொல்லிக்கொண்டே ஸ்டேஷன் படியில்  இறங்கினேன்! 

Teynampet Coffee House-ல் தனியாக கோலி சோடா குடித்துக்கொண்டு நமக்கும் இப்படி எல்லாம் நடந்தா நல்லா இருக்கும்லே என்று யோசித்துக்கொண்டே எழுதிய கற்பனை கதை! இதில் நான் கோலி சோடா தனியாக குடித்தேன் என்று யோசித்ததும் கற்பனையே!      

கற்பனையை கற்பனையாக எழுதியது, 
சிவராஜ் பரமேஸ்வரன் 

Add Your Comments

Say Something

 

Comments

from Sudhakar Arjunan at 2023-06-18 15:34:04

First time enjoyed traffic block is cool thought process. However I doubt whether it’s real or true. All the best keep writing