Utilising the situation.
NEET பரிதாபங்கள்
By Admin - 18 Jul 2021 1040 2

Jobless Guy: சார் NEET கட்டாயம் தேவையா?
Active Politician: என்ன கேள்வி தம்பி இது? NEET கட்டாயம் தேவை தம்பி! தகுதியான பாரபட்சம் இல்லாம தகுதியான மாணவர்கள் வரணும்னா NEET வேணும் தம்பி!! இன்னும் சொல்ல போனா, வரும் காலத்தில் BE, 12th Std, 10th Std, BSc; எல்லாத்துக்குமே NEET வேண்டும். அப்போதான் தகுதியான மாணவர்கள் உருவாவங்கன்னே!!
Jobless Guy: சார் ஒரு சந்தேகம்!!
Active Politician: கேளு தம்பி!!
Jobless Guy: படிக்குற பசங்க நலனுக்காக இந்த எக்ஸாம் எல்லாம் கொண்டுவரது நல்லாத்தான் இருக்கு! அதே மாதிரி, இந்த MLA, MP, Ministers, CM, PM, etc…எல்லாருக்குமே ஒரு NEET எக்ஸாம் வையுங்களேன். நல்ல தகுதியான அரசியல் வாதிகளும் வரட்டுமே. என்ன நான் சொல்லறது?
Active Politician: அரசியலுக்கு எதுக்கு தம்பி NEET? காமராஜர் படிச்சுகிட்டா அரசிலியலுக்கு வந்தாரு?
Jobless Guy: நான் NEET-ஐ வேணாம்னு சொல்லலியே! முதல்ல அரசியல் சாசனத்தில் இருக்குறவங்களுக்கு வையுங்களேன்னு சொல்றேன்! இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் என்ன? அரசியல் அறிவியல் என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன? இப்படி அடிப்படை தகுதிக்கான ஒரு தேர்வு வையுங்களேன்! அரசியல் தெளிவு கொஞ்சம் இருந்தால் நல்லாத்தானே இருக்கும்னு சொல்ல வந்தேன்!!
Active Politician: என்ன தம்பி கிறுக்குத்தனமா சம்பந்தம் இல்லாம பேசிகிட்டு! போங்க போய் ஒழுங்கா ஏதாவது வேலை இருந்தா பாருங்க! சும்மா எப்போ பார்த்தாலும் அரசியல்வாதிகளை குறை சொல்லிக்கிட்டு!!
Jobless Guy: கோச்சுக்கிடாதீங்க சார்! சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் சார்! வேலைன்னு சொன்னப்பதான், சார் ஒரு சின்ன பட்ஜெட்ல செம்ம ஸ்கிரிப்ட் இருக்கு! தெரிஞ்ச ஆள் யாராவது இருந்தா சொல்லுங்க….
Active Politician: உன் வாய்ப்பேச்சுக்கு கிடைக்க கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தாலும் பாக்குறேன்! ரூவா கொஞ்சம் செலவாவும் பரவா இல்லையா?
Jobless Guy: !!!!
எழுதியது நானே என்கின்ற,
நான்.
Add Your Comments
Say Something
Comments
from Saravanan Kunjithapatham at 2021-07-21 16:00:57
பயனுள்ள, சிந்திக்க வைக்கும் பதிவு! "நீட்"டி முழக்கிப் பேசினாலும் "நீட்"டை ஒதுக்க முடியாத நிலைமை! நிசர்சன உண்மையும் கூட!! ஆள்பவர்களின் ஆளுமைக்குத் தேர்வென்பது, அவர்களது திறமையை உலகிற்குத் தெரிய வைக்கும் வாய்ப்பே! ஆனால் அதற்கு வாய்ப்பேயில்லை.. அமைப்பு அப்படி!! ஹ்ம்ம்..
See More Stories
20 Jun 2024
பெஹலா நஷா பெஹலா ஹூவா... ...
அந்த ஹிந்தி பாட்டு கேட்டுக்கொண்டே அண்ணாநகர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தேன், பெஹலா நஷா பெஹலா ஹூவா... நயா பியாரு ஹேய் நயா இந்துசார...
08 Nov 2023
ஆனந்தியின் கதை! ...
ஆனந்தி ஒரு முடி ஒப்பனையாளர் (Hair stylist) அவள் செக்கோன் என்ற உலகிலுள்ள காரும் என்ற நாட்டில் spa salon ஒன்றை நடத்தி வந்தாள். இங்கு தமிழ் தான் தேசிய மொ...
08 Oct 2021
28.777 வினாடிகள்...
எதை பற்றி எழுதுவது யாரை பற்றி எழுதுவது என யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது என் கற்பனை கதாபாத்திரம் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது! அது என்ன கற்பன...