அறியா அடிமை
By Admin - 18 May 2021 829 0

இருட்டில் வெளிச்சமாய்
கண்கள் தெரிய
அந்த வெளிச்சம் கொண்டு
ஈரம் படிந்த உதடுகளை
மின்மினியென காண
கண்ட அந்த மின்மினி இதழ்களை
சுவைத்து உண்ண
கண்கள் கிறங்கி
இமைகள் மூட
வெளிச்சம் மறைந்து
இருளில் இதழ்களின்
இசை மட்டும் ஒலித்தது!
மௌன மோகங்கள்
சத்தமில்லாமல் சத்தமிட
உடல்கள் உஷ்ணத்தால்
அமிர்தத்தை சிந்த!
சிந்திய அமிர்தம்
உடலெங்கும் சங்கமிக்க
உஷ்ணத்தின் உஷ்ணம்
உடல்களை
குளிரச்செய்கின்றது!
குளிர்ந்த அக்னியில்
ஆண்மையும் பெண்மையும்
ஓருயிராக
சங்கமிக்க!
அந்த அணையா
அக்னியை!
பெண்மை வாரியணைத்து
அணைகின்றது!
ஆண்மை பெண்மைக்குள்
அடிமையாய் அகப்பட்டு
அவளுக்கு தலைதாழ்த்தி
தலைவணங்குகின்றது!
காலம்போய காலமாய்
எப்பொழுதும் அடிமையென்று
அறியா அடிமையாய்
ஆண்மை...
நான் எழுதியதை என்ன வென்று வரையறுப்பது என்று எனக்கு தெரியவில்ல,
எனினும் எழுதியது நான் என்கின்ற,
சிவராஜ் பரமேஸ்வரன்.
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
11 Jun 2021
காதல் - அத்தியாயம் 6...
அத்தியாயம் 5 படிக்க இங்கு click செய்யவும் மொட்டைமாடி தண்ணீர் தொட்டியின் மீதேறி உட்கார்ந்துக்கொண்டு ராயபுரம் துறைமுகத்தின் அழகை ரசிப்பது கொடுப்பின...
10 Oct 2022
புது கதை
தேன்மொழி பூங்கொடிவாடி போச்சே என் செடிவான்மதி பைங்கிளிஆசை தீர வாட்டு நீ உன்ன நெனச்சொன்னும் உருகல போடிசோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடிகெத்து காட்டிட்ட...
17 Oct 2020
The Indian Godman - OSHO
A man who was born as Rajneesh turned into a Bhagwan and later became Osho - The Indian godmanDuring his lifetime, he was viewed as a controvers...