அன்புள்ள பூனை மூஞ்சிக்கு
By Admin - 26 May 2021 1028 0
அன்புள்ள பூனை மூஞ்சிக்கு,
டேய் நாங்க இங்க நல்ல இருக்கோம். நீ அங்க எப்படி இருக்க? நல்ல இருக்கியா? புது இடம் நல்ல இருக்கா? உன்னை எப்படி காண்டாக்ட் பண்றது? ஏதாவது நம்பர் இருக்கா? ரோமிங்னாலும் பரவாயில்லை டாப் அப் போட்டு கூப்பிடுறேன்.
முட்டாத்தனமா பேசுறேன்ல, தெரியும் டா என்ன பண்றது சினிமா பார்த்து பார்த்து கெட்டுபோய்ட்டேன். ஒரு நப்பாசையுல இந்த லெட்டர எழுதுறேன். இது கூட உனக்கு வருமான்னு தெரியல, இருந்தாலும் எழுதுறேன்! கிடைச்சா படி!!
டேய் பூனை, உனக்காக இந்த முறை ஊட்டி வேண்டாம் பாலி போலாம்னு சூசைகிட்ட நாராகிட்ட பேசியிருந்தேன்டா, இந்த முறை நானே ஓகே-ன்னு சொல்லிட்டேனா பார்த்துக்கோயேன்! போன முறை பிளான் பண்ணப்போ என்கிட்ட காசு இல்லை. இந்த முறை பிளான் பண்றப்போ நீ இல்லை! TR ரஹைமிங் செம்ம டைமிங்கா வருது. நீ அடிக்கடி சொல்லற அந்த வார்த்தை "As Usual Plan Drop" இந்த முறையும் நடந்துருச்சு. இந்த முறை "As Usual Musthafa".
உன்ன வாராவாரம் வந்து பார்க்குற நான், இரண்டு வருசமா வந்து பார்க்கவே இல்லைன்ற வருத்தம், என் கடைசி மூச்சு நிற்கும் வரை இருக்கும் டா. நான் என்ன தான் காரணம் சொன்னாலும் அது என் மனசுல குத்திகிட்டுதான்டா இருக்கு. என்னை மன்னிச்சுடுறா பூனை வேற என்ன சொல்றதுன்னு தெரியல பூனை!!
நீ எங்களை விட்டு போய்ட்டேன்னு நரேன் என்னை கூப்பிட்டு சொன்னப்ப வராத கண்ணீர் உங்கப்பா என்னை பார்த்து "கூடவே சுத்துனீங்களடா ஒரு வட்டம் அவனைப்போய் பார்க்கலயா?" ன்னு சொன்னப்ப மனசு உடைஞ்சுபோச்சுடா முஸ்தபா. அந்த மனுசன் தேம்பி தேம்பி அழ! ஆறுதல் சொல்ல தெரியாம, கோழைத்தனமா முகக்கவசத்த போட்டு முகத்தை மூடிட்டு உன்னை கடைசிமுறையா பார்க்க போனேன்.
நீ நிம்மதியா எந்த ஒரு வலியும் இல்லாம தூங்கிட்டு இருந்த. நீ நிரந்தரமா தூங்கிட்டேன்னு தெரியாம பாத்திமா உன்கிட்ட நின்னு "அவர் தூங்கிட்டு இருக்கார், ஆஸ்பத்திரி கொண்டுபோனும். ஆம்புலன்ஸ் வருது" ன்னு அவ சொல்ல நான் மறைச்சுவச்ச கண்ணீர் வெளியே வந்துச்சுடா பூனை. நான் அழுறத நீ மட்டும் பார்த்து இருந்திருந்தா சிரிச்சு இருப்பேல. பூனை உன்ன பத்தி எனக்கு தெரியும்டா.
பாத்திமா அலறல் தாங்காம, இஸ்மாயிலோட துக்கம் பார்க்க முடியாம வெளியே வந்துட்டேன். வெளியே நரேன்கிட்ட பேசிக்கிட்டே உன்னோட பால்கனிய ஏறிட்டு பார்த்தேன். அந்த பழைய நினைவுகள் என்னை அறியாமல் சிரிக்க வச்சுச்சு. இருந்தாலும், அவன்(கடவுள்) இப்படி செஞ்சு இருக்க கூடாது பூனை. நான் சொன்னதா சொல்லு, அவன் மேல செம்ம காண்டுல இருக்கேன். நேர்ல பார்த்தேன் பளார் பளார்ன்னு வைப்பேன் சொல்லு. எங்ககிட்ட இருந்து சீக்கிரம் பிரிச்ச பாவத்துக்கு உன்ன நல்லா பார்த்துக்க சொல்லு. இல்லேன்னு வச்சுக்கோ நித்தி(நித்யானந்தா)-கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லு!
என்னடா இவன் லூசுத்தனமா பேசுறேன்னு பார்க்குறியா! புக்கு படிச்சு படிச்சு கொஞ்சம் லூசாத்தான் இருக்கேன். கொஞ்ச அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பூனை!
இனி ராயபுரம் வரும்போது எப்பவும் போல உன் பால்கனிய பார்ப்பேன், ஆனா யாருக்கு கை காட்டுறது. நரேனும் நானும் கண்டிப்பா அந்த வழியா நடக்கும் போது எங்க கண்ணு எங்களறியாம அந்த பால்கனிய நோக்கித்தான் டா போகும்.
என்னைக்குமே நாம சாக மாட்டோமுன்னு நினைச்சுட்டேன் போல! ஏத்துக்க முடியலடா! இருந்தாலும் நீ ரொம்ப சீக்கரம்டா!
நானும் (நாங்களும்) அங்கதான் வந்தாகணும், வந்தவுடன் புது ட்ரிப் பிளான் பண்றோம் - தட்டுறோம் தூக்குறோம்! அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட்பண்ணுமா. அம்மாவையும் பாட்டியவும் விசாரிச்சதா சொல்லு!
Take care பூனை மூஞ்சி (Mustafa)
இப்படிக்கு,
As Usual கடாபி (Sivaraj)
கூடவே,
As Usual நாரா (Naren)
As Usual சூசை (Dennis)
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
26 Aug 2022
தமயந்தன்
என்ன பேசுவது என்ன மெசேஜ் டைப் செய்வது என்று தெரியாமல் மோனிஷாவின் இன்ஸ்டாக்ராமின் மெசஞ்ஜரை பார்த்துக்கொண்டிருந்தேன். சரி கேட்டுவிடலாமா என்று முடிவு செய...
13 Oct 2020
Free Philosophy - Friendship
The portrayal of friendship I see in the movies is so artificial and fake where people sacrifice everything for their friends, treat friends better th...
16 Oct 2020
The Indian Affair
The Indian affair is always termed sexual. It’s ugly and it has a culture discrimination. It's not about two individuals. It is always about two famil...