Hey Sivaraj, Very nice story and narrated perfectly , dont know whether to trust or not. Will read part 2 soon. Keep writing.
ஒரு மொட்டை மாடி கதை அத்தியாயம் 1
By Admin - 21 May 2021 1342 2

விடியற்காலை 3 மணி, கனவு தூக்கத்தை கலைத்தது. நாவு தளதளர்த்தது, அரை லிட்டர் தண்ணீர் தொண்டையை குளிரச்செய்தது. காத்தாடியின் சத்தம் அமைதியை கெடுத்தது.
அமைதியை தேடி எனது அறையின் கதவை திறந்து எதிரே உள்ள ஆள் இல்லா மொட்டை மாடிக்கு சென்றேன். தெரு விளக்கில் சாலை வெள்ளையாய் மின்னியதை கண்டேன். எப்போதும் ஆள்நடமாட்டம் உள்ள அந்த சாலைச்சந்தை இப்பொழுது கொரோனவால் மயான அமைதியாய் இருந்ததை கண்டேன். எங்கோ மழை பெய்ய இங்கே குளிர் காற்று என்னை குளிரச்செய்தது.
தரை குளிர, செருப்பை அணிந்துக்கொண்டு கொசுக்களை கைதட்டி கொன்று இருட்டை கடந்து தண்ணீர் தொட்டியின் மீது ஏறி உட்கார்ந்தேன். தூரே மின்னல் மேகத்திற்குள் வேகமாக சீறியது. அந்த வெளிச்சத்தில், சிகப்பு நிற சுடிதார் அணிந்து ஒருவள் என் அருகே உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். கண்டவுடன் பயத்தில் ஐயோ என்று அலறி தண்ணீர் தொட்டியிலிருந்து தரையில் விழுந்தேன். அவள் மெல்ல புன்முறுவினாள். மின்னல் சற்று கோபமாக சீற அவளின் முகம் இப்பொழுது தெளிவாக தெரிந்தது, தேவதை பேயாய் தெரிந்தாள்.
இம்மியளவு பயம் குறையாமல் "யார் நீ? இங்க இந்த நேரத்துல என்ன பண்றே?" என்று நான் முச்சு இறைக்க கேக்க. அவளோ எதுவும் பேசாமல் எதிர் திசையில் உள்ள செல்போன் டவர் ஒன்றை காட்டி "இந்த இருட்டுல, கருப்பு நீல வெளிச்சத்துல செல்போன் டவர் பர்ரிஸ் டவர் மாதிரி என்ன அழகா இருக்குல?" லூசாக இருப்பாளோ என்று குழம்பிபோய் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தேன். நான் முழிப்பதை பார்த்த அவள், "நான் செகண்ட் புளோர் சிவகாமி பாட்டியின் பேத்தி, வேகேஷனுக்கு வந்த இடத்துல கொரோனா லாக்டவுன்ல மாட்டிகிட்டேன்".
எட்டி அவளது கால்களை பார்த்தேன், மனதிற்குள் "அப்பாடா கால்கள் இருக்கு பேய் இல்ல" என்று எண்ணியவாறு தண்ணீர் தொட்டியின் மீது ஏறி ஓரமாக ஒரு மூலையில் உட்கார்ந்தேன். பெண் என்று தெரிந்த பிறகு அதுவும் அழகான பெண் என்று தெரிந்த பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் திணறிக்கொண்டே "நீங்க சென்னைல எங்க இருக்கீங்க" என்ற ஒரு முட்டாள்தனமான கேள்வியை கேட்டேன். அவளும் சிரித்துக்கொண்டே "நான் சென்னைல இல்ல பிளோரிடால இருக்கேன். அப்பா அம்மா அங்க இருக்காங்க. இந்த முறை கொரோனா தொற்று காரணத்தால அப்பா அம்மா வரல. நான் பாட்டிய கூப்பிட்டு போலாம்னு வந்தேன். வந்த இடத்துல மாட்டிகிட்டேன்!" அவளது தோள்களை தூக்கி சோகத்தோடு சொன்னாள்.
அவள் சொன்னவற்றை கேட்டு விட்டு அமைதியாய் இருந்தேன். சில நிமிடங்கள் கடந்ததும் அமைதி தொடர்ந்தது. அவள் மூன்று முறை திரும்பி பார்த்தாள். மூன்று முறையும் அவளை பார்த்து சிரித்தபடி அமைதியாய் இருந்தேன். என் அமைதியின் கோழைத்தனத்தை அறிந்து அவளாக பேசினாள் "நீங்க என்ன பண்றீங்க?" நான் எதிர்பார்க்காத கேள்வி என்னை தூப்பாக்கி தோட்டாக்களாய் தாக்கியது, திணறிகொண்டு "ஐ வாண்ட் டு பிகம் எ பிலிம் மேக்கர்" விண்ணை தண்டி வருவாயா கௌதமின் டயலாக்கை பதறாமல் அடித்துவிட்டேன்.
"வாவ் சூப்பர்" அவள் கண்கள் விரிய சொல்ல, எங்கோ என்னை அறியாமல் ஒரு பெருமை என்னை ஆட்கொண்டது. தொடர்ந்து அவள், "நானும் NYFA-ல தான் (நியூயார்க் பிலிம் அகாடமி) பிலிம் மேக்கிங் கோர்ஸ் பண்ணிட்டு இருக்கேன்" என்று சொன்னவுடன் சற்றுமுன் முளைத்த எனது சிறகுகள் எரிந்து பஸ்மாமாகியது. "உங்களுக்கு புடிச்ச பிலிம் மேக்கர் யாரு?" என்று கேட்க "பாலுமகேந்திரா" என்று சற்றும் தளராமல் சொன்னேன். "வாவ் சூப்பருங்க! எனக்கு அவரு படங்கள் எல்லாம் ரொம்ப புடிக்கும்! முக்கியமா மூன்றாம் பிறை, அப்பரும் தட் மலையாளம் மூவி யாத்ரா. வண்டர்புல் பிலிம் மேக்கர் ஹி இஸ்!"
பெருமையோடு கர்வம்கொண்டு "அவர்கிட்ட தான் பிலிம் மேக்கிங் கத்துக்கிட்டேன்" அவள் இன்னும் கண்கள் விரிய, "சினிமா பட்டறை" "ஆமாம்" "யூ ஆர் வெரி லக்கி மேன்!" என்று சொல்லி அவள் என்னை தோளில் செல்லமாக தட்ட. எனக்குள் ஏதோ சில்லு சில்லுத்தது.
விடியும் வரை நாங்கள் சினிமாவை பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். என் வாடகை வீட்டின் வாழ்நாளில் முதல் முறையாக என் மொட்டைமாடியில் சூரியோதயம் கண்டேன்! அந்த மஞ்சள் வெயில் அவளின் முகம் பட்டு மின்னியது.
எனது கண்கள் மெல்ல மெல்ல மூடியது, காட்சிகள் எல்லாம் மெல்ல இருட்டாகிப்போனது.
காலை 7.30 மணிக்கு சாலை மீண்டும் சுறுசுறுப்பாகியது. 10 மணி லாக்கடவுனுக்குள் காய்கறி வாங்க கூட்டம் கூடியது. நெரிசல் சத்தம் அமைதியை கெடுத்தது. வெயிலின் தாக்கம் கண்களை கூசச்செய்தது. கண்களை திருகியவாறு தண்ணீர் தொட்டியின் மீது கொட்டாவிட்டு தூங்கி எழுந்தேன். நல்ல கனவு என்று எனக்குள் சிரித்துக்கொண்டேன்! கீழே இறங்கி எனது அறையை நோக்கி செல்லும் பொழுது காய்கறி கடையில் ஒரு பெண் என்னை நோக்கி கை அசைத்தாள், மங்கலாய் தெரிந்த கண்களை மீண்டும் திருகினேன் அப்பொழுது எனது கையில் இருந்த கைபேசி அதிர்ந்தது, எடுத்து பேசினேன் "ஹாய் நான் ரம்யா பேசுறேன் நேத்து நைட் மொட்டைமாடியில பேசினோம்ல!" சற்றே தலைசுற்றியது. அவள் அங்கிருந்து வேகமாக கை அசைத்தாள்! என்னை அறியாமல் எனது கை அவளை நோக்கி அசைக்க ஆரம்பித்தது.
தொடரும்...
- ரகு (எ) ரகுவரன்
அத்தியாயம் 2 படிக்க இங்கு click செய்யவும்
All my stories are legally registered with Screen Writers Association - SWA. For further queries mail me at contact@padmajaamedia.com
Add Your Comments
Say Something
Comments
from Saravanan Kunjithapatham at 2021-07-21 17:11:08
தரமான சம்பவம்! சிறப்பு!!👌👏👏
See More Stories
31 Dec 2021
30 டிசம்பர் 2021 சென்னை...
30 டிசம்பர் 2021 சென்னை காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்சின்ன தகரம் கூட தங்கம் தானேகாதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலேமின்னும் ...
20 May 2021
கொரோனா பயம் ...
நண்பர் ஒருவரது குடும்பம் நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 2020 முதல் இந்நாள் வரையில் வெளி உலகம் பார்த்ததில்லை. சரி அவர்கள் ஏதோ காரணம் கொண்டு நோய்த்தொ...
25 May 2024
வெண்ணிலாவின் தேரில் ஏறி...
"வெண்ணிலாவின் தேரில் ஏறிகாதல் தெய்வம் நேரில் வந்தாளேமானம் உள்ள ஊமைப்போலதானம் கேட்க கூசி நின்றேனேநிறங்கண்டு முகம் கண்டாநான் நேசம் கொண்டேன்அவள் நிழல் கண...