அவள்
By Admin - 25 May 2024 1112 0

வருடங்கள் பல கழித்து அவளின் நினைவுகள் கனவுகளில் வர அவளை கூப்பிடலாமா வேண்டாமா என்று என் உள்மனது கேட்க கூப்பிடலாமே என்று என் வெளிமனது கூறியது.
நானும் எனது பழைய மானம் கெட்ட வெட்கங்களை மறந்து அவளை கூப்பிட முயன்றேன் இருந்தும் கூப்பிட முடியவில்லை. காரணம் எனக்கும் எனது போனுக்கும் ஒரு வாரமாக ஒரு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அவளை அழைக்கலாம் என்று நான் போனை எடுப்பேன் “சீ மானங்கெட்ட நாயே! அசிங்கமா இல்லே! நடந்ததெல்லாம் மறந்துட்டியா மயிரே...” என்று அழகான தமிழில் போன் என்னை பார்த்து திட்டும். ரோஷத்தில் போனை எடுத்த இடத்திலே வைத்துவிடுவேன்.
இப்படியாக பல வாரங்கள் ஓடி இப்பொழுது பல மாதங்கள் ஆகிக்கொண்டிருந்தது! அவளோ கனவில் வருவதை நிறுத்துவதாக தெரியவில்லை! என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கையில் ஒரு டாக்டரின் அறிமுகம் கிடைத்தது! அவர் எங்களது பிளாட்டில் மேல்மாடியில் பெண்டா ஹவுஸ்ஸில் தங்கிகொண்டிருப்பவர். சென்னையில் மிகவும் அறியப்படும் பெரும் புள்ளி. அந்த புள்ளியை சந்தித்து என் பிரச்சனையை கூறினேன்.
அவரோ என் பிரச்சனையை கேட்டு சிரித்து விட்டு “சார் பேசாமா நம்ம மாசாஜ் பார்லர் போங்க உங்க சோகம் எல்லாம் சந்தோசமா மாறிடும்! இதுக்கு மருந்து மாத்திரையெல்லாம் தேவையில்லை சார்!” என்று கூற, அப்பொழுது தான் எனக்கு தெளிவாக தெரிந்தது ஏன் இவர் பெரும் புள்ளி என்று!! அந்த பெரும் புள்ளியிடம் கோலம் போடாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டேன்!! முக்கிய குறிப்பு அவர் ஒரு பெண் மருத்துவர். ஏன் இதை சொல்கிறேன் என்றால்!!! அவர் அவ்வளவு அழகு...கண் இமைக்காமல் அவரை பார்த்துக்கொண்டிருந்தேன் என்றால் பாருங்களேன்...
மறுபடியும் கனவு. “என்ன எழவுடா இது” என்று சொல்ல தூண்டும் நல்ல கனவுகள். அவளும் என்னை விடாமல் துரத்தி கொண்டிருந்தாள். நானும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் வீட்டின் காலிங் பெல் அடித்தது “இந்த நடுராத்திரியில் யாராக இருக்கும்?” என்ற சிந்தனையில் கதவை திறந்தேன். திறந்த எனக்கு அதிர்ச்சி அவள் என் கதவின் அருகே நின்று கொண்டிருந்தாள்! கூட நான் மேல் மாடியில் போய் சந்தித்த அந்த அழகான டாக்டர் “என்ன டாக்டர் இவங்க எப்படி உங்க கிட்ட வந்தாங்க?” என்று கேட்டு கொண்டிருக்க அவள் என் தோள் மீது கைவைத்து “என்ன சிவா மறந்துட்டியா? இன்னைக்கு பௌர்ணமி நான் உன்ன சந்திக்க வரேன்னு சொல்லி இருந்தேன்லே!!” நான் யோசித்துக்கொண்டிருக்க அவள் மீண்டும் என் கன்னத்தை தடவி “என்ன சிவா யோசிக்குறே?” என்று கேட்க நான் தெளிவுற்று “நீங்க என்ன தப்பா நினைச்சு வந்துடீங்க! நான் சிவா இல்லை நான் கௌதம்!! சிவா 415 ஆவது ரூம் தோ இங்கிருந்து நாலாவது ரூம்!!” என்று சொல்ல அவள் முகத்தில் ஒரு சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. அவள் டாக்டரை திரும்பி பார்க்க டாக்டர் தனது மொபைல் போனை எடுத்து எதையோ தேடி ஓச்சு கொட்டி தலையில் அடித்துக்கொண்டு “சாரி மேடம் ரூம் சர்வீஸ் தப்பா மெசேஜ் அனுப்பிடாங்க!!” என்று கெஞ்சியவாறு சொல்ல அவள் கோபத்தில் கடிந்து கொண்டு டாக்டரை நோக்கி “உங்க மிஸ்டேக் ஆல தேவை இல்லாம ஒரு உயிர் போக போகுது!!” அவள் திரும்பவும் என்னை நோக்கி “சாரி கௌதம் உங்க டேட் இன்னும் வரல இருந்தாலும் நீங்க கேட்க கூடாத பார்க்க கூடாத விஷயத்தை எல்லாம் பார்த்துடீங்க...” எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் அவளை பார்த்துக்கொண்டிருந்தேன். டாக்டர் ஒரு ஊசியை எடுத்தார் என் கழுத்தில் குத்தினார் “தேவி நீங்களே இப்படி செய்யலாமா?” என்று கேட்டு முடிப்பதற்குள் எல்லாம் இருட்டானது..
கண் திறந்து பார்த்தபொழுது மஞ்சள் குண்டு பல்பின் ஒளியில் ஒரு ஹிந்தி கார பெண்மணி என் மீது ஏறி அவளது ஆசையை தீர்த்துக்கொண்டிருந்தாள். நான் சுற்றும் முற்றும் பார்க்கையில் திரை சேலைகள் தொங்கிக்கொண்டிருந்தது. பெண்களின் ஒரு நீளமான ஒரு கியூ நின்றுகொண்டிருந்தது. எனது கை கால்கள் கட்டிலோடு கட்டப்பட்டிருந்தது. என் வாய் துணியால் கட்டப்பட்டிருந்தது. என்னை அவள் கற்பழித்துக்கொண்டிருந்தாள்.
இது நடக்கும் வருடம் கி.பி 6789, 100 பெண்களுக்கு 20 ஆண்கள் என்று கணக்கில் ஆண்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம்.
2500 வருடங்களாக (அதாவது கி.பி 4289 ஆண்டு முதல்) ஆண்கள் பெண்களின் காதல் வசத்தால் அழிந்து இப்பொழுது காமத்தின் வசத்தால் அழிந்து கொண்டு வருகின்றனர். இந்த ஆண்களை காக்க இனி எந்த யார் வருவாரோ?
சிவராஜ் பரமேஸ்வரன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
18 Jun 2022
அத்தியாயத்தில் ஒரு நாள்...
இன்று போல் அன்றும் தனது அறையில் கார்த்திக் தான் எழுதி கிறுக்கிய காகிதக் குவியலை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது மீராவிற்கு போன் வருகின்...
08 Oct 2021
28.777 வினாடிகள்...
எதை பற்றி எழுதுவது யாரை பற்றி எழுதுவது என யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது என் கற்பனை கதாபாத்திரம் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது! அது என்ன கற்பன...
24 Oct 2020
UNMASK
Secret Friend - A secret is no secret if it’s heard by two. So the one who knows is the one who holds. Everyone would have a one who holds to your sec...