தும்ஹிஹோ
By Admin - 25 May 2024 554 0

"ராஜா இனி ப்ளீஸ் எனக்கு மெசேஜ் பண்ணாதே!!"
"ஏன் என்ன ஆச்சு? Did I offend you?"
"ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்லே!!"
"Then whats the issue!!"
"சாரி என்னால எதுவும் இப்போ சொல்ல முடியாது!! நான் உன்ன பிளாக் பண்றேன்!! Good bye..."
என்ற கடைசி வாய்ஸ் மெசேஜ் வாட்சப்பில் வர என்ன வென்று புரியாமல் மொபைலை பார்த்துக்கொண்டிருக்கின்றான் ராஜா!
ரேகா ஏன் பிளாக் செய்தாள்! எதற்காக பிளாக் செய்திருப்பாள் என்று ஒரு நூறு முறை தனுக்குத்தானே அந்த கேள்வியை தேய்ந்த டேப் ரெக்கார்டர் போல திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தான்.
கோபம் தலைக்கு ஏறியது, போனை தூக்கி பெட்டில் வீசி எறிந்தான்! தலையணை தூக்கி தரையில் போட்டு மிதித்தான்! ஹால்லிற்கு சென்று ஹெட் செட்டை எடுத்து மாட்டிக்கொண்டு டிவி-யில் "தும் ஹி ஹோ" ஆஷிக்கி 2 ஹிந்தி படத்தின் பாட்டை அதிக சத்தத்துடன் தனது ஹெட் போனில் கனெக்ட் செய்து தானும் சேர்ந்து பாட தொடங்கினான்! (ரேகா ஹிந்திகார பெண் என்பதால் ஹிந்தி பாட்டு) ராஜா கதறி புரண்டு கண்ணீர் மல்க உரக்க பாடிக்கொண்டிருந்தான்.
என்ன கூச்சல் என்று பவானி அம்மா அடுக்கலையிலிருந்து வெளியே ஓடி வந்து பார்க்க, மகன் ராஜா பைத்தியம் போல் டிவியில் வீடியோ போட்டுக்கொண்டு ஏதோ புறியாத பாஷையில் அழுது கதறிக்கொண்டிருந்தான்! ராஜா, அம்மா வந்தது கூட கவனிக்காமல் கண்களை இறுக மூடி தன்னிலை மறந்து பாடிக்கொண்டிருந்தான். பவானி அம்மா ராஜாவின் செயலை கண்டு அருகிலிருந்த துடைப்பத்தை எடுத்து ராஜாவின் புறணியில் பட்டு பட்டு பட்டு என்று அடித்துக்கொண்டே
"ஏன்டா மழைன்னு ஸ்கூல் லீவு வுட்டா!! நடுவீட்டுல உக்கார்ந்து சண்டித்தனமா பண்றே!! எங்கடா உன்ன பெக்க வச்ச மவராசன்?"
என்று அடித்துக்கொண்டிருக்க மழையில் சிறிதாய் நனைந்து குடையை மடித்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்த பிரவீன் மகனை அடித்துக்கொண்டிருப்பதை கண்டு
"ஏண்டி அவனை போட்டு சும்மா அடிக்கறே?"
"ஆமாம் எனக்கு வேண்டுதலு பாரு! யோவ் நானே ஆபீஸ் டென்ஷன்ல செம்ம கோவத்துல இருக்கேன்!! இதுல இவன் நடுவீட்டுல உட்கார்ந்து ஹிந்தி பாட்டு பாடுறான்!!"
"ஏண்டி ஹிந்தி பாட்டு பாடுறது ஒரு குத்தமா?"
"டேய் நான் ஆபீஸ் கால கிச்சேன்ல வச்சு அட்டென்ட் பண்றேன், கூட உங்களுக்கெல்லாம் சமைக்கணும் இதுல இவன் சத்தம் வேற!! எரிச்சல் வராதா!! சரி என்ன கூப்பிடுறாங்க நான் போறேன் பை!! yes sir I was on the line sir"
என்று சொல்லிக்கொண்டே பவானி அடுக்கலைக்குள் நுழைய பிரவீன் அழுதுகொண்டிருந்த ராஜாவிடம் சிரித்துக்கொண்டே அருகில் சென்று
"என்ன டா ஆச்சு கண்ணு எதுக்கு நீ சத்தம் போட்டுட்டு இருந்தே"
என்று செல்லமாய் கேட்க 6 வயது ராஜா மழலைகலந்த குரலில்
"ரேகா என்னைய பிளாக் பண்ணிடிச்சுப்பா"
என்று சொல்லி அழ ஆரம்பிக்கின்றான். பிரவீன் இதை கேட்டுவிட்டு சத்தமாய் சிரிக்க பவானி அடுக்கலையிலிருந்து எட்டி பார்க்க இந்த கதை முற்றம் பெறுகின்றது...
15 நவம்பர் 2023 ஆன இன்று "தும் ஹி ஹோ - ஆஷிக்கி 2" படத்தின் பாட்டை கேட்டு கொண்டிருக்க தோன்றிய கதை...
பின் குறிப்பு என் கதையில் வரும் கதாபாத்திரத்தின் பெயர்கள் யாவும் எனக்கு தெரிந்த சுற்றுவட்டத்திலுள்ள நபர்களின் பெயர்களை வைத்து எழுதுகின்றேன் அதற்காக அந்த கதாபாத்திரங்கள் யாவும் உண்மை கதாபாத்திரம் என்று நம்பிவிட வேண்டாம் கதை போல கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே... சுதாகர் சார் தெளிவுபடுத்திட்டேன் சார்!! இனி உங்களுக்கு அடி விழுந்தா நான் பொறுப்புயில்லை சார்.
சிவராஜ் பரமேஸ்வரன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
25 Nov 2021
ஒரு முழு காம காதல் கதை ...
மறுப்பு அறிவிப்பு : தலைப்பின் பெயருக்கும் இந்த கதைக்கும் ஒரு சம்பந்தம் உண்டு ஆனால் அந்த சம்பந்தம் நீங்கள் நினைப்பது போல் உள்ள சம்பந்தமோ சம்பவமோ கிடையா...
12 Oct 2021
படையப்பா பிச்சை ...
அவன் நாள் தவறாமல் தினந்தோறும் காலை 6 மணிக்கு தனது அழுக்கு பையோடு அம்பாள் கோவிலுக்கு வருவான். கொரோனா காலத்திலும் வந்து கொண்டிருந்தான். அவன் வருவான் கோவ...
16 Oct 2020
The Indian Affair
The Indian affair is always termed sexual. It’s ugly and it has a culture discrimination. It's not about two individuals. It is always about two famil...