ஆனந்தியின் கதை!
By Admin - 08 Nov 2023 1011 0

ஆனந்தி ஒரு முடி ஒப்பனையாளர் (Hair stylist) அவள் செக்கோன் என்ற உலகிலுள்ள காரும் என்ற நாட்டில் spa salon ஒன்றை நடத்தி வந்தாள். இங்கு தமிழ் தான் தேசிய மொழி. அந்த நாட்டின் இப்பொழுதிய மக்கள் தொகை சுமார் 500-லிருந்து 1000 பேர் என்று வைத்துக்கொள்ளலாம். அந்த உலகின் மக்கள் மொத்த மக்கள் தொகை 5000-லிருந்து 8000 பேர் இருப்பார்கள் என்று நிபுணர் குழு சொல்கின்றது.
இந்த காரும் நாட்டில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கையில் அதிகம், தலா 100 பெண்களுக்கு வெறும் 50 ஆண்களே இருந்தனர். அதனால் ஆண்கள் அதிகம் அவதிக்குள்ளானார்கள்! ஆண்கள் அதிகமாக துன்புறுத்தப்டுவதும், கற்பழிக்கப்படுவதும் வன்புணர்வு செய்து கொல்லப்படுவதும் வாடிக்கையாகவே இருந்தது! கடுமையான சட்டங்களான 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, 2 ஆண்டு சிறை 18 வயது கீழுள்ள பெண்களுக்கு ஓர் ஆண்டு சீர்திருத்தம் வழிமுறைகள் கொண்டு வந்தும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் இருந்தது. ஆண்கள் இறந்து கொண்டே இருந்தனர். அரசாங்கம் ஆண்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தால் என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கினர்!!
ஆண்களின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்தால் இயற்கை சமநிலை குறையும் அபாயம் இருந்தது. அது ஒரு பெரிய காரணமாக இல்லை எனினும் அது ஒரு முக்கிய காரணமாகவே பிரகடனம் செய்யப்பட்டது. இரண்டாவது முக்கிய காரணம் பொழுதுபோக்கு அது முற்றிலுமாக பாதிக்க படும்! ஆண்களே பெண்களின் பொழுதுபோக்கு அம்சம் ஆண்கள் இல்லையென்றால் பெண்களுக்கு எப்படி பொழுதை கழிப்பது? யோசித்தாலே பெரும் அபாயமாக இருக்கின்றது!! இந்த பிரச்சனையில் LGBQT+, பெண்கள் பெண்களையே திருமணம் செய்ய ஒரு கேஸ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் வேறு!! இருக்கும் மக்கள் தொகை இப்படியே சென்றால் அடுத்த 5 ஆண்டில் பாதியாக குறைந்து விடும் அபாயம் உள்ளதாக தீமோம் நாட்டு அரசு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த சூழலில் தான் ஆனந்திக்கு நிஷாந்த் மீது காதல் வந்தது! சட்டப்படி ஆனந்தி வாரத்தில் இருமுறை தான் தன் கணவரான சுதாகரை சந்திக்க இயலும் அதுவும் மக்கள் தொகையை கூட்டும் நோக்கத்தோடு மட்டும் தான் சந்திக்க வேண்டும்! அன்றைய பொழுதை அவர்கள் எக்காரணம் கொண்டும் வேறு விதமாக விரையம் செய்ய கூடாது. சுதாகர் ஆனந்திக்கு மட்டும் கணவன் அல்ல, அவன் 3 பேரை திருமணம் செய்துள்ளான். ஒரு ஆண் சட்டப்படி 3 பேரை கட்டாயம் திருமணம் செய்யவேண்டும்! வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அந்த கணவனுக்கு விடுமுறை. அது கூட அரசியல் நிர்பந்தங்களுக்கு இணங்க சில நாட்கள் அரசிலுள்ள பெரும் தலைவிகளோடு கூடி குலாவி இளைப்பாறவேண்டும். இந்த கேடுகெட்ட முறைக்கு அவர்கள் வைத்த பெயர் தான் கலப்பு திருமணம்!! இங்கு காமம் உண்டு திருமணமும் உண்டு ஆனால் எக்காரணங்கொண்டும் காதல் இல்லை.
காரும் நாட்டில் காதல் ஒரு தேசதுரோகம் குற்றமாக கருதப்படுகின்றது, தப்பி தவறி எந்த ஆடவனாவது காதலித்தால் கற்பழித்து கொள்வது வழக்கம் இப்பொழுது நோய் தொற்று அதிகம் உள்ளதால் அரசியல் தலைவிகள் அவர்கள் இச்சத்தை முடித்த பின் கல்லால் அடித்துக் கொல்லுதல் சட்டமாக்கப்பட்டுள்ளது!! கூட சேர்ந்து காதலித்த பெண்டிற்கோ 1000 ரூபாய் அபராதமும் இனி இந்த மாதிரி தவறு செய்யமாட்டோம் என்று மன்னிப்பு கடிதம் எழுதி தந்தாள் போதுமானது.
இப்படியான கொடிய சட்டங்கள் இருக்க ஆனந்தி நிஷாந்தை காதலிக்க ஆரம்பிக்கின்றாள். நிஷாந்த் எவ்வளவு மறுத்தும் அதை ஏற்காமல் நிஷாந்த்தை தனது காதல் வலையில் சிக்க வைக்கின்றாள்! இவர்கள் காதல் காமத்திற்கும் சட்டத்திற்கும் அப்பாற்பட்டிருந்தது. தொடக்கத்தில் ஆனந்தியை மனதளவில் நேசித்த நிஷாந்த் இப்பொழுது உடலளவிலும் நேசிக்கலானான், ஆண்களுக்கே உண்டான possessiveness-ல் மாட்டிக்கொண்டான். ஆனந்திக்கும் நிஷாந்தை தவிர்த்து வேறொரு ஆடவனோடு சங்கமிக்க மனமில்லாமல் தவிக்கலானாள்!! ஆனால் அவள் பெண் அவளால் அதை தாங்கிக்கொள்ள முடிந்தது! பாவம் நிஷாந்த் அவனால் அதை தாங்கிக்கொள்ள இயலவில்லை அவனது மனைவிகளோடு புணர்வு கொள்ள மறுத்தான்! பூகம்பம் வெடித்தது!!
இம்முறை இதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற முடிவோடு அரசாங்கம் ஒரு கடுமையான கொடுமையான தண்டனை ஒன்றை பிறப்பித்தது! நிஷாந்தை ஒரு தேசிய விபச்சாரியனாக அறிவித்தது மேலும் அவனை வீதியில் உள்ள கொடிக்கம்பத்தில் வைத்து கட்டியது! யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நிஷாந்தை செய்துக்கொள்ளலாம் என்ற கொடிய தண்டனையை விதித்தது!!
இதை கேட்டு சுக்குநூறாக உடைந்து போனாள் ஆனந்தி!! என்ன செய்வதென்று தெரியாமல் வீதிக்கு ஓடி சென்றாள்! அங்கே பெண்கள் படை சூழ நிஷாந்த் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தான். உடைகள் கிழிந்து நிர்வாணம் தரித்து ரத்தம் சொட்டச்சொட்ட நிஷாந்த் வேட்டையாடப்பட்டுக்கொண்டிருந்தான். ஆனந்தி அங்கு ஓடி வர போலீஸ் அவளை பிடித்து விலக்கியது. ஆனந்தி நிஷாந்த் நிஷாந்த் என்று கதறி கொண்டிருக்க நிஷாந்தின் வேதனை கதறல் சத்தம் மெல்ல மெல்ல குறைந்து கொண்டிருந்தது. ஒருவழியாக அந்த சத்தமும் நின்றது, அந்த நிசப்தத்தில் நிஷாந்த் அமைதியாக வான் நோக்கி படுத்துக்கிடந்தான்.
போலீஸ் ஆனந்தியை விட ஆனந்தி தவிழ்ந்து நிஷாந்தின் அருகில் வந்து அவனை மடி மீது வைத்து ஓவென்று அழுது ஒப்பாரியிட தொடங்கினாள்... ஆனந்தி நிஷாந்தின் கண்களை மூட அந்த உலகம் இருண்டது....
மீண்டும் கண் விழுத்து பார்த்தபொழுது...
சார் சார்... ஹெட் மசாஜ் முடிஞ்சாச்சு... ஹேர் வாஷ் பண்ணிக்கலாமா... நான் மீண்டும் இந்த உலகில் ஆனந்தியை பார்த்தேன்...
சிவராஜ் பரமேஸ்வரன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
25 Oct 2020
Space Travelling Gods
Are Gods Space Travellers? When ISRO, CNSA, JAXA, RFSA and NASA run behind trying to find an extraterrestrial being, we the moral religious organ...
13 Oct 2020
Free Philosophy - Friendship
The portrayal of friendship I see in the movies is so artificial and fake where people sacrifice everything for their friends, treat friends better th...
18 May 2021
அறியா அடிமை...
இருட்டில் வெளிச்சமாய் கண்கள் தெரிய அந்த வெளிச்சம் கொண்டு ஈரம் படிந்த உதடுகளை மின்மினியென காணகண்ட அந்த மின்மினி இதழ்களை சுவைத்...